இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2 படங்களின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் ராம்சரணின் நடிப்பில் உருவாகும் RC15 என்னும் திரைப்படத்தையும் தற்போது இயக்கி வருகிறார்.

இந்தியன் 2 & RC15… ஒரே நேரத்தில் சாமர்த்தியமாக கையாளும் ஷங்கர் - எப்படி தெரியுமா?

அது எப்படி சாத்தியம் ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் இயக்குகிறார் என்று RC15 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜவிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், மாதத்தில் 12 நாட்கள் இந்தியன் 2 படத்திற்கும் மீதமுள்ள 12 நாட்கள் ராம் சரண் படத்திற்கும் ஷங்கர் ஒதுக்கியிருக்கிறார். அதன்படி ஷூட்டிங் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.