ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் ‘சீயான்’ விக்ரம்?
அந்நியன், ஐ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர்-விக்ரம் கூட்டணி உருவாகிறதா என காண்போம்..
‘சீயான்’ விக்ரம் வீர தீர சூரன் படத்தை தொடர்ந்து எந்த படத்தில் நடிக்கின்றார் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது. இந்நிலையில், விக்ரம் மற்றும் இயக்குனர் ஷங்கர் சந்திப்பு நடைபெற்று ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. ஷங்கர் மற்றும் விக்ரம் மீண்டும் இணைய வாய்ப்பிருக்குமோ என்ற கேள்விகள் எழுகின்றது.
ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படங்களான இந்தியன்- 2 மற்றும் கேம் சேஞ்சர் வெற்றிபெறவில்லை. இதனால், தான் யார் என நிரூபிக்கும் கட்டாயத்தில் தற்போது ஷங்கர் இருக்கின்றார். இச்சூழலில், ஷங்கரின் அடுத்த படம் குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில், அவர் விக்ரமை சந்தித்து பேசியதாக தகவல்கள் வருகின்றன.
ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் ஏற்கனவே அந்நியன் மற்றும் ஐ என இரு பெரும் வெற்றிப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது நினைவுகூரத்தக்கது.
தற்போது ஷங்கரின் அடுத்த பட ஹீரோ யார் என்பதும் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புகள் அதிகம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
அந்நியன் மற்றும் ஐ என இரு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த கூட்டணி மீண்டும் இணைந்தால், ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.
