என்ன தவம் செய்தேனோ: எஸ்.ஜே.சூர்யா உருக்கம்..
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
வாலி, குஷி, நியூ, இசை என இயக்கிய அவர், பல ஆண்டுகளுக்கு பிறகு டைரக்சன் பக்கம் அவர் திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ படம் தொடர்பான அறிவிப்புக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள உருக்கமாக பதிவில்,
‘கில்லர் படம் குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அன்பும், ஆருயிருமான நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இந்த அன்பு கிடைப்பதற்கு என்ன தவம் செய்தேனோ. விரைவில் ‘கில்லர்’ படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகும்’ என உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார் இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ படத்தின் வாயிலாக கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி, கில்லர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம், எஸ்.ஜே. சூர்யாவின் கனவுப்படமாகவும் பான் இந்திய படைப்பாகவும் உருவாகவுள்ளது. இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
