Web Ads

கேம் சேஞ்சர் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுக்கும் என முன்பே தெரியும் : தயாரிப்பாளர் தில் ராஜு ஓபன் டாக்.!!

கேம் சேஞ்சர் திரைப்படம் நஷ்டத்தை கொடுக்கும் என்று முன்பே தெரியும் என கூறியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு.

producer dil raju talk about game changer movie

producer dil raju talk about game changer movie

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர். ஷங்கரின் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் திரைப்படமாகவும் இருக்கும்.

அந்த வகையில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படம் இருந்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் வெற்றியடையவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆன தில் ராஜு படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

அதாவது ஒரு படம் ஓடுமா ஓடாதா என எடிட்டிங் போதே தெரிந்து விடும் இந்த படம் எனக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுக்கும் என முன்பே தெரிந்து விட்டதாக சொல்லி இருக்கிறார் மேலும் விநியோகஸ்தர்களும் படம் மீது பெரிய நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூறிய இந்த பதில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

producer dil raju talk about game changer movie

producer dil raju talk about game changer movie