அஜித்தின் ‘ஏகே64’ படம் பற்றி இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

Web Ads

‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்த்தில் உருவாக்கப்பட்டது.

அதேபோல், படம் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அஜித் நடிக்கும் 64-வது படத்தையும் ஆதிக் இயக்கவிருக்கிறார். இந்த தகவலை அவர், உறுதிப்படுத்தி இருக்கிறார். ஏகே64-வது படத்தில், மிஷ்கின் வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், ஆதிக், அஜித்தின் 64-வது படம் குறித்து தெரிவிக்கையில் ‘குட் பேட் அக்லி’ அஜித் ரசிகர்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. ஆனால், அஜித்தின் 64-வது படம் அனைவருக்குமான படமாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும். அஜித்தை புதிய கோணத்தில் காண்பிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அது அவர் ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக இருக்கும்’ என்றார்.

இப்படம், ஹார்பரை பின்னணியாக கொண்ட கதைக்களம். இந்த படத்திலும் அஜித் பல கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஏகே64-வது படத்தை 2026-ம் ஆண்டு கோடையில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

director adhik ravichandran about ajith in 64th film
director adhik ravichandran about ajith in 64th film