ரட்சிதாவுடன் விவாகரத்து நடக்கப் போவதாகவும் அவருக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்கப்போவதாகவும் தகவல் வெளியான நிலையில் தினேஷ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் ரீல் ஜோடிகள் ஆக இருந்து ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவர் தான் ரட்சிதா மற்றும் தினேஷ். சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள ரட்சிதா தற்போது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ரட்சிதா உடன் விவாகரத்தா? விரைவில் அவருக்கு இரண்டாவது திருமணமா?? முதல் முறையாக ஓப்பனாக விளக்கம் அளித்த தினேஷ்

இந்த நிலையில் இவருக்கும் தினேஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டது. அதே சமயம் ரட்சிதா இயக்குனர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் எனவும் தகவல் பரவியது.

இந்த நிலையில் தினேஷிடம் இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுக்க அதில் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார் தினேஷ். வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல எங்களது வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த பிரிவு தற்காலிகமானது என நான் நம்புகிறேன். காலம் அனைத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறேன் எனக் கூறியுள்ளார். ரட்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேட்டதற்கு வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா? அப்படித்தான் ஆளாளுக்கு கண்டபடி எழுதி வருகிறார்கள்.

ரட்சிதா உடன் விவாகரத்தா? விரைவில் அவருக்கு இரண்டாவது திருமணமா?? முதல் முறையாக ஓப்பனாக விளக்கம் அளித்த தினேஷ்

இதுவரைக்கும் நானும் சரி ரட்சிதாவும் சரி சட்டரீதியாக பிரிவதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.