பிக் பாஸ் வீட்டுக்குள் ரக்ஷிதா சென்றுள்ள நிலையில் அவரது கணவர் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்து ஞாயிற்றுக்கிழமை ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கியது.
இந்த நிகழ்ச்சி மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் ஒருவர் தான் சீரியல் நடிகை ரக்சிதா மகாலட்சுமி. பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர் சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து பெற்று விட்டதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. இப்படி அந்த நிலையில் மகாலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் நடிகர் தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள மகாலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். இதனால் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போ விவாகரத்து என பரவிய விஷயங்கள் எல்லாம் வெறும் வதந்தி தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.