துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் பொன்னியன் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. சில காரணங்களால் தள்ளி போன இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த படக்குழு இப்படத்தை வருகிற ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் என்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அதன்படி, துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டிரைலரை வருகிற ஜூன் 17-ந் தேதி மலேசியாவில் நடைபெற இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியின் போது வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் மேலும் அப்படத்தில் இருந்து இரண்டு பாடல்களும் அன்றைய தினம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.