துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Dhruva Natchathiram Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்து வருகிறது.

ரிது வர்மா, ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா இந்த படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் ஏற்கனவே மே 29-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள பிரிட்டிஷ் நடிகர் பென்னன்ட் இந்த படம் வரும் மே மாதத்தில் வெளியாகும் என டுவிட் செய்துள்ளார்.

இதனால் படத்தின் ரிலீஸ் மே 29ல் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.