துருவ நட்சத்திரம் : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த சிம்ரன், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்த சிம்ரன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார்.

Dhruva Nakshatram Simran who gave the latest update
Dhruva Nakshatram Simran who gave the latest update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என ஏழு ஆண்டுகளாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சிம்ரன் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது துருவ நட்சத்திரம் முழுமையான ஆக்சன் படமாக இருக்கும் என்றும் ஸ்டைலிஷ் ஆக உருவாகி இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் சரியான நேரத்தில் இந்த திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும். விக்ரம் செம ஸ்டைலிஷ் ஆக நடித்திருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.

Dhruva Nakshatram Simran who gave the latest update
Dhruva Nakshatram Simran who gave the latest update