Dhruv Vikram Gettup for New Movie

உடல் எடையை கூட்டி மாறுபட்ட கெட்டப்பிற்கு மாறியுள்ளார் துருவ் விக்ரம்.

Dhruv Vikram Gettup for New Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். மிகத் திறமையான நடிகர் என்று பெயரெடுத்தவர்.

இவருடைய ஒரே மகனான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலமாக திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தன் அப்பா விக்ரமுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்காக தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக மாற்றி வருகிறார் துருவ்‌. ஏற்கனவே சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இப்படியான நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. உடல் எடையைக் கூட்டி கட்டுமஸ்தாக தன்னுடைய உடலமைப்பை மாற்றியுள்ளார் துருவ்.

இந்த புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ பாருங்க

https://www.instagram.com/p/CI95E3knewm/?igshid=eokpfo8gum64