நடிகர் அஜித் குமாரை சந்தித்துள்ளார் தயா அழகிரி.

Dhaya Alagiri With Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து பிட்டாக மாறி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் ஷாலினி மற்றும் அவருடைய மகள் என இருவரையும் தய அழகிரி மனைவியுடன் சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அது குறித்து பதிவு செய்துள்ளார் தயா அழகிரி.

இவர் பதிவு செய்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.