இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு மே மாதம் இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

D Imman in Second Marriage Details : தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் டி இமான் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார்.

இசையமைப்பாளர் டி இமானுக்கு இரண்டாவது திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா? வெளியான தகவல்கள்

எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு இசைத்துறையில் ரசிகர்கள் என பலரும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது இமானுக்கு இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் டி இமானுக்கு இரண்டாவது திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா? வெளியான தகவல்கள்

சென்னையை சேர்ந்த உமா என்ற பெண்ணுடன் வரும் மே மாதத்தில் திருமணம் நடக்க உள்ளது. பெரியவர்கள் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது எனவும் தெரியவந்துள்ளது. விரைவில் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.