CWC Rithvika About Her Saree Purchase

ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேல என்கிட்ட ஒரு புடவை கூட இல்லை என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் குக்கு வித் கோமாளி.

CWC Rithvika About Her Saree Purchase : தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் உள்ள நடிகைகள் தங்களது உடைகள் இப்போது கிராண்ட்டாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள். தங்களது உடைகளுக்கு அளவே சம்பளத்தில் அதிக அளவில் செலவு செய்வார்கள் என நான் நிறைய கேள்விப் பட்டுள்ளோம்.

ஆனால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பங்கேற்ற போட்டியாளர் ரித்விகா இதற்கு மாறாக உள்ளார். இவர் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது கூறியவை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

என்னிடம் இருக்கும் புடவைகளின் அதிகபட்ச விலை ரூபாய் 1500. நான் எனக்கு பிடித்து இருந்தால் அந்தப் புடவையை உடனே எடுத்து விடுவேன். அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி 500 ரூபாயாக இருந்தாலும் சரி. எனக்கு பிடித்திருந்தால் போதும் உடைகளுக்காக பெரிய அளவில் பட்ஜெட்டை ஒதுக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

அவர் அந்த நிகழ்ச்சியில் கட்டி வந்த புடவையின் விலை ரூபாய் 1100 எனத் தெரிவித்துள்ளார். ரித்திகாவின் இந்த பேச்சு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.