குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் டைட்டில் வின்னர் யார் என தெரியவந்துள்ளது.
CWC 3 Title Winner Analysis : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா, வித்யூலேகா, அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், கிரேஸ் கருணாஸ் ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் கிரான் பினாலே ஷூட்டிங் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இதனால் தகவல் அறிந்தவர்கள் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா தான் என கூறிய வருகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
டைட்டில் வின்னர் யார் என்பது இந்த வாரம் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.