தமிழகத்தின் இன்றைய கொரானா பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம் வாங்க.

Covid19 Details in Tamilnadu 29.05.21 : சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கரோனோ வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. கடந்தாண்டு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் மீண்டும் அதிதீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு லட்சத்தை தாண்டி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 30,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இன்றைய பாதிப்பு நிலவரங்களை வெளியிட்டுள்ளது தமிழக சுகாதாரத் துறை. இது குறித்த அறிக்கையில் இன்று 30,016 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,39,716 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 31,759 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,06,298 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 486 பேர் பலியானததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,261 ஆக உயர்ந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.