Corona Treatment Details in Tamilnadu
Corona Treatment Details in Tamilnadu

இந்தியாவிலேயே கொரானா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தை பிடித்து இருப்பது மட்டுமல்லாமல் தரமான சிகிச்சையும் அளித்து வருகிறது.

Corona Treatment Details in Tamilnadu : கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் உச்சத்தை அடைய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் இந்தியாவில் எங்குமே இல்லாத அளவு அதிகப்படியான அளவில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் தமிழகம் முழுவதும் 113 புறநா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் அதிகம்.

இதனால் தமிழகத்தில் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 21 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

2075522 பேருக்கு தமிழகத்தில் இதுவரை ஒருவனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

விஜய் டிவி மகாபாரதம் சீரியல் நடிகர்கள் ஒரே எபிசோடுக்கு மட்டும் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா மிரண்டு போயிடுவீங்க!

அதேபோல் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் தரமான சிகிச்சையால் இதுவரை 1,43,297 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ( ஜூலை 24 ) ஒரே நாளில் மட்டும் 6,504 பேர் உடல்நலம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற மாநிலங்கள் பரிசோதனையில் தமிழகத்தை முந்த வேண்டும் என்றால் இனி வரும் நாட்களில் சோதனையை பல மடங்கு அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் இதுவரை நடந்துள்ள மொத்த கொரானா பரிசோதனைகள் குறித்த விவரம் இதோ

  • மகாராஷ்டிரா -17 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • டெல்லி -8 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • கேரளா -17 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • கர்நாடகா -11 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • குஜராத் -5 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • உத்தர பிரதேசம் – 17 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • ஆந்திர பிரதேசம் -15 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் இதுவரை 1,99,749 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 1,43,297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.