ஒன்று மட்டும் உறுதி: ‘கூலி’ படம் குறித்து லோகேஷ் அப்டேட்ஸ்-ரசிகர்கள் உற்சாகம்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் அடுத்த மாதம்14-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இச்சூழலில் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில்,

‘கூலி’ படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. எனக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் தினமும் எழுந்தவுடன் சமூக வலைதளங்களையும் பார்க்கிறேன். படத்தைப் பற்றி ஏதேனும் செய்திகள் இருக்கும். அது ரொம்பவே பிடித்திருக்கிறது. அவை அனைத்துமே படத்துக்கான விளம்பரம் தானே என்பதால் விட்டுவிடுவேன்.

இப்போதைக்கு இறுதிக்கட்டப் பணிகளை முடிக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் படம் வெளியாக இருப்பதால், அதற்கான தணிக்கை பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும். பின்பு ஐமேக்ஸ் வெளியீட்டு பணிகளும் இருக்கிறது.

ஆகையால் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்ட எதற்கான பணியையும் நாங்கள் இன்னும் தொடங்கவில்லை. முதலில் வெளியீட்டிற்கான பணிகளை முடித்துவிட்டு, விளம்பரப்படுத்தும் பணிக்குள் வரலாம் என இருக்கிறோம்.

ஒன்று மட்டும் உறுதி. ஆகஸ்ட் 2-ம் தேதி ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும். அதற்கு முன்பாக டீசர் உள்ளிட்டவை இருக்காது’ என தெரிவித்துள்ளார் லோகேஷ். இது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘மோனிகா’ பாடல், ஜெயிலர் பட ‘காவாலா’ பாடலை விடவும் ரசிகர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

coolie movie trailer to be released on august 2nd
coolie movie trailer to be released on august 2nd