கருப்பு, ஜனநாயகன் வெளியீட்டு தேதியில் குழப்பம்?

Web Ads

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு மற்றும் ஜனநாயகன் திரைப்படங்களின் வெளியீட்டு தேதியைச் சுற்றி தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கருப்பு திரைப்படம் ஆரம்பத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அந்த தேதியை தயாரிப்பாளர்கள் உறுதி செய்வார்களா அல்லது இரண்டு வாரங்கள் பின்னுக்கு மாற்றி மே 15 ஆம் தேதி வெளியிடுவார்களா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் படத்தின் இறுதி வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதே நேரத்தில் ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்குப் பிறகு, ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன் வெளியிட வேண்டும் என்ற திட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 30 ஆகிய தேதிகளில் ஒன்றில் படம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஜனநாயகன் திரைப்படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த தேதிகளில் வெளியீட்டை உறுதி செய்வார்களா அல்லது வெளியீட்டை மே மாதத்திற்கு மாற்றுவார்களா என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த இரண்டு படங்களின் வெளியீட்டு தேதி குறித்து திரையுலகிலும் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.