விக்ரம் நடிப்பில் வெளியாக போகும் “கோப்ரா” படத்தின் இரண்டாவது பாடலின் புரோமாவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகர்தான் விக்ரம். இவர் நடிப்பில் வெளியான ஐ, கடாரம் கொண்டான் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தற்போது நடித்துள்ள படம் தான் “கோப்ரா”. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரில்லான படங்களை எடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.

இதில் விக்ரமுக்கு ஜோடியாக  ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்துள்ளார்.  மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கேஎஸ். ரவிக்குமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் இணைந்துள்ளனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ. ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

 தற்போது இப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் திரையரங்கில் வெளியாக போவதாக படகுகுழுவினர் அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டிருந்தது. சமீபத்தில் இப்படத்திற்கான போஸ்டர்ஸ் மற்றும் முதல் பாடலான தும்பித்துள்ளல் பாடல்   வெளியாகி ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “உயிர் உருகுதே” பாடலின் புரோமாவை படக்குழு வெளியிட்டுள்ளது.

YouTube video