
தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
CM Speech in Erode : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. புயல், மழை, வெள்ளம், கொரொனா என அனைத்து பேரிடர் நேரங்களிலும் தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து மக்களை பாதுகாத்து வருகிறது.
இப்படியான நிலையில் பொள்ளாச்சி பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பலர் கூட்டாக கைது செய்யப்பட்டனர். இதில் அதிமுகவினருக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த மூவரும் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். பாலியல் வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டது பற்றி திமுக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்ட பிரச்சார கூட்டம் ஒனறில் இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார். தவறு யார் செய்தாலும் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் கட்சி அதிமுக. யாராவது ஒருவர் தவறு செய்தால் அடுத்த நொடியே அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதை அதிமுக எப்போதும் செய்கிறது.
ஆனால் ஒரு கடையில் வயிறார சாப்பிட்டு விட்டு பில்லை கட்டுங்கள் என கேட்டதும் கடைக்காரரிடம் திமுகவினர் சண்டையிடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்டாலின் அவர்கள் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.
திமுகவில் யார் தவறு செய்கிறார்களோ அவர்களுக்கு தலைவர் பதவி கிடைக்கிறது என பேசியுள்ளார்.