YouTube video

CM EPS Meet With Thiruvarur Farmer : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. அம்மாவின் அரசு செயல்படுத்திய மகத்தான திட்டங்களை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அதிமுக அரசு ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கில் தளர்வுகளையும் அறிவித்து வருகிறார்.

அதே சமயம் கொரானா வைரஸ் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தமிழகத்திலுள்ள அத்தனை மாவட்டங்களுக்கும் சென்று கொரானா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். ஆய்வு செய்வது மட்டுமல்லாமல் அந்த மாவட்டங்களுக்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

30 வருடத்திற்கு பிறகு தமிழகம் நெல் உற்பத்தியில் புதிய புரட்சி‌!

இதற்கு முன்னதாக மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, நாகபட்டினம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆய்வு செய்து இருந்த நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த பிறகு தஞ்சாவூர் சென்ற வழியில் நீடாமங்கலம் என்ற கிராமத்தில் விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும் விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாயத் தொழிலாளர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கியுள்ளார்.

மேலும் விவசாயத்தை மையமாகக் கொண்ட டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவித்துள்ளார். விவசாயிகளை மதித்து நேரில் சென்று ஆலோசனை நடத்திய தமிழக முதல்வரை அப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.