சந்திரமுகி 2 படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார். இவரது நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

இதில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க சந்திரமுகியாக கங்கனா ரெனாவத் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா சரத்குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தில் இருந்து ஸ்வகத்தாஞ்சலி என்ற பெயரில் முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகியது. இந்த நிலையில் படத்துக்கு இசையமைத்துள்ள கீரவாணி என்னுடைய வேலை முடிந்தது என பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் இருந்து மற்ற 9 பாடல்களை வெளியிட ஆவலோடு காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். இதனால் சந்திரமுகி 2 படத்தில் மொத்தம் 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது உறுதியாகிறது.

இதனால் ரசிகர்கள் படம் முழுக்க பாட்டு மட்டும் தான் இருக்கும் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.