விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன், சிரஞ்சீவி-நயன்தாரா நடித்த படம் மோதல்

தமிழ், மலையாளம் என பிஸியான நயன் தற்போது தெலுங்கிலும் தடம் பதிக்க தொடங்கியுள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

40 வயதாகியும் இன்றும் ஹீரோயினியாக ரவுண்ட் கட்டும் நயன்தாரா, தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய படத்தின் அறிவிப்பை மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார்.

படக்குழுவுடன் இணைந்து நயன் வெளியிட்டுள்ள வீடியோவில், நயன் செம கூலாக தெலுங்கு பேசுகிறார். சிரஞ்சீவியின் 157-வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை அனில் ரவிபிடி இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, இந்த ஆண்டு பொங்கலுக்கு அனில் ரவி புடி இயக்கத்தில் வெளியான ‘சங்கராந்திக்கு ஒஸ்துனாம்’ படம் செம ஹிட் ஆனது. வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி நடித்தார்கள்.

இந்நிலையில், இவரது இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் இப்படத்தின் கதையை படித்த நயன், செம எண்டர்டைனிங்கான கதை என கூறியுள்ளார். மேலும், இயக்குனர் அனில் ரவிபுடியுடன் இணைந்து நின்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதால், விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தோடு மோதலுக்கு தயாராகி வருகிறது. இது ‘ஜன நாயகன்’ படத்தின் தெலுங்கு வசூலை பாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

chiranjeevi 157th movie release on 2026 pongal