விஜய் ரசிகர்கள் செய்த உதவி குறித்து நடிகர் விஜய்க்கு கனடா நாட்டு மேயர் நன்றி தெரிவித்து வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட் திரை வட்டாரத்தில் இளைய தளபதியாக தனக்கென தனி இடம் பிடித்து வளம் வருபவர் விஜய். இவர் அண்மையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் குடும்ப திரைப்படமாக வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தில் ராஜு தயாரிப்பில் வெளியான இப்படம் சில இடங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கனடாவில் உள்ள விஜயின் மக்கள் இயக்கத்தினர் செய்துள்ள சமூக நலப் பணிகளை பாராட்டி அந்நாட்டின் மேயர் பகிர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, தளபதி விஜய் நடத்தி வரும் மக்கள் இயக்கத்தினர் பல சமூக நல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டங்கள் கடந்து விஜய் ரசிகர்கள் செய்த உதவி!!… வீடியோ மூலம் நன்றி தெரிவித்த கனடா நாட்டு மேயர்.!

அந்த வகையில் கனடாவில் உள்ள மக்கள் இயக்கத்தினர் ரத்த தானம், உணவு வழங்குதல் போன்ற சமூக நலப்பணிகளை மேற்கொண்டு உள்ளனர். இதற்கு அந்நாட்டில் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்ட் தனது நன்றி மற்றும் பாராட்டுகளை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

கண்டங்கள் கடந்து விஜய் ரசிகர்கள் செய்த உதவி!!… வீடியோ மூலம் நன்றி தெரிவித்த கனடா நாட்டு மேயர்.!

அதில் அவர், கன்னடாவில் செயல்படும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன், மிகச் சிறப்பான முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், இந்த சமூக நல பணியை விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர வேண்டும். என வாழ்த்தி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.