Bigil Viswasam
2019-ல் அதிக வசூல் செய்து முதலிடம் பிடித்த படத்தை தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்களது நடிப்பில் வெளியாகும் படங்களை வைத்து தான் ரசிகர்கள் மத்தியிலேயே போட்டி இருக்கும்.

இந்த வருடம் அஜித் நடிப்பில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் ரிலீசாகின. இரண்டுமே வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றன.

அதே போல் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படங்களில் விஜயின் பிகில் திரைப்படம் தான் அதிக வசூல் செய்த திரைப்படம் என சென்னையில் உள்ள ரோஹினி தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது அந்த தியேட்டரின் நிலவரம் மட்டும் தான் என குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.