இன்று நடக்கப் போகும் வைல்ட் கார்ட், விஜய் சேதுபதி சொன்ன விஷயம், வெளியான முதல் ப்ரோமோ..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது இந்த வாரம் தீபாவளி கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடியிருந்தனர்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி புது ஆள உள்ள கொண்டு வந்தாதான விளையாட்டு இன்னும் சுவாரசியமா இருக்கும் என்று வைல்ட் கார்ட் பற்றி பேசி உள்ளார். இந்த நிகழ்ச்சி என்று 8:00 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram