சீரியலில் இருந்து விலகுகிறேனா? விளக்கம் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி..!
சீரியலில் இருந்து விலகுவது குறித்து பேசி உள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராஜி.
சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாகவும் இதனால் சீரியலில் இருந்து விலகப்போவதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஜீ விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது சீரியலில் இருந்து விலகியதாக சொன்னது அனைத்தும் வதந்தி என்றும் நான் உங்கள் ராஜீயாக தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனால் இதுவரை தொடர்ந்த வதந்திக்கு இது ஒரு முற்றுப்புள்யாக அமைந்துள்ளது.