விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, திணறிய ஜாக்லின்,வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் விஜய் சேதுபதி, இந்த வாரம் வீட்ல எல்லாருக்கும் பேய் புடிச்சிருக்கு, பேய் எல்லாரையும் புடிச்சு இருக்கான்னு கேட்டா, பேய் புடிச்சிருக்குறவங்களுக்கு ஒன்னும் பண்ணாம பிடிக்காதவங்களுக்கு போய் தேடி தேடி பண்ண மாதிரி இருந்தது என்று சொல்லுகிறார். இரக்கமே இல்லாம விளையாடுங்கன்னு சொன்னா, இறங்கி விளையாடினாங்க சிறப்பு. இவங்க விளையாடின விளையாட்டு வீட்டையும் கெடுத்துருச்சுன்னு நினைக்கிறேன் விசாரிப்போம் என்று சொல்லி இருக்கிறார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டெவில்ஸ் 1 டெவில் 2 யார் சரியா பண்ணல என்று கேட்க ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவை அனைவரும் சொல்லுகின்றனர். இவர்கள் நல்லா பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தோம். ஆனா பண்ணல என்று சொல்ல நானே எதிர்பார்த்தேன் என்று விஜய் சேதுபதி சொல்லுகிறார். ஜாக்லின் அவங்க விளையாடினது புடிக்கல என்று சொல்ல அப்போ கேங்கா ஃபார்ம் பண்ணிக்கிறதா என்று கேட்க அனைவரும் கைதட்டுகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram