Pushpa 2

வாடிவாசல் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

வாடிவாசல் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

vaadivaasal movie shooting update
vaadivaasal movie shooting update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் அவர் நடிக்கப் போகும் வாடிவாசல் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது இதனால் படம் ட்ராப் ஆகி விட்டதா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மதுரையில் பிப்ரவரி மாதம் வாடிவாசல் படத்திற்கான சூட்டிங் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கான டெஸ்ட் சூட் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

vaadivaasal movie shooting update
vaadivaasal movie shooting update