இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் என்று தெரியவந்துள்ளது.

Bigg Boss Tamil 6 4th Eviction Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் ஐந்து சீசனின் வெற்றியைத் தொடர்ந்து ஆறாவது சீசன் சமீபத்தில் தொடங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது.

ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சாந்தி, அசல் கோளாறு, ஷெரீனா உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் விக்ரமன், அஸீம், ஆயிஷா, மகேஸ்வரி, ராம் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

மகேஸ்வரி மற்றும் ராம் ஆகியோர் மட்டுமே மிக குறைந்த அளவில் ஓட்டுகளை பெற்றெடுப்பதாக சமூக வலைதளங்களில் ஏற்கனவே தகவல் பரவி இருந்த நிலையில் மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.