பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாகவே மூன்று படங்களில் கமிட்டாகி உள்ளார் போட்டியாளர் ஒருவர்.

Bigg Boss Raju in Upcoming Movies : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று தொண்ணூத்தி ஏழாவது நாள் எபிசோட் ஒளிபரப்பானது.

விரைவில் முடிவுக்கு வர உள்ள பிக் பாஸ் வீட்டில் தற்போது ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி, நிரூப் ஆகியோர் மட்டுமே உள்ளனர். தாமரைச்செல்வி எதிர்பாராதவிதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ராஜு. ஏற்கனவே கவின் நடிப்பில் வெளியான நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இந்த படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.