விஜய், பிரதீப் மோதலால் பிக் பாஸ் வீடு பரபரப்பாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாம் சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.
இன்றைக்கான இரண்டாம் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிரதீப் வீட்டின் தலைவர் விஜயை கேள்வி கேட்க அவர் இங்க எல்லோரும் வேலை பண்ணிட்டு இருக்கும் போது டவல் ஆட்டிட்டு உட்கார்ந்து இருந்தா உங்க கிட்ட கேட்க முடியாது என பதிலடி கொடுக்கிறார்.
எனக்கு இன்னைக்கு நைட் சிக்கன் ஃப்ரை வேணும் என சொல்ல நிக்ஷன் டீ, காபி மட்டும் தான் நீங்க கேட்கும் போது போட்டு தர முடியும் என சொல்ல அப்போது நான் வாங்கி கொடுத்து பொருளை எல்லாம் குடுத்துடூங்க என சொல்கிறார்.