பிக் பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Bigg Boss 5 Contestants Salary Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் இதுவரை நாடியா மற்றும் அபிஷேக் என இருவர் வெளியேற்றப்பட்டு விட்டனர். முதல் வாரத்திலேயே திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து அவராகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

முகமது அமிர்-ஹர்பஜன் சிங் டுவிட்டரில் எல்லை தாண்டிய மோதல்..

இதனையடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது. மேலும் சமீபத்தில் போட்டியாளர்களின் சம்பள விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. 18 போட்டியாளர்களில் மிகவும் பிரபலமானவரான பிரியங்காவே 2 லட்சம் தான் சம்பளம் வாங்குகிறார்.

ஆனால் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் அனைத்து போட்டியாளர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்குகிறார். அவருக்கு ஒரு வாரத்திற்கு 2.75 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு எதற்காக இவ்வளவு சம்பளம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செம Jolly ஆக கலாய்த்த Karu Pazhaniappan – மேடையில் விழுந்து விழுந்து சிரித்த MP.Kanimozhi