லஷ்மி எனக்கு பிறந்த பொண்ணுதான் என்ற உண்மையை பாரதி இடம் போட்டு உடைத்துள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Update 30.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா வின் மகளான லட்சுமி தனது வீட்டில் வைத்துக்கொண்டு உண்மை தெரியும் வரை அனுப்ப மாட்டேன் என பிடிவாதமாக இருந்தார்.

ஹேமாவை அழைத்து வந்து பாரதி வீட்டில் விட்ட கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பாரதி கண்ணம்மா ஹேமாவை பத்திரமாக பார்த்துக் கொண்டதற்காக பணம் தருவதாக கூறுகிறார். நான் தாய்மையை பணத்துக்காக விற்பதில்லை என கண்ணம்மா கூறுகிறார்.

அதன் பின்னர் லஷ்மியை அனுப்புமாறு கேட்கிறார். பாரதி பழையபடி முடியாது என்று கூறிவிடுகிறார். கண்ணம்மா கடைசியாக கேட்கிறேன் லட்சுமியை அனுப்ப முடியுமா முடியாதா என கேட்கிறார். கடைசி முறை கேட்டாலும் சரி வராது முறை கேட்டாலும் சரி இதுதான் பதில் என பாரதி கூறுகிறார்.

இதனையடுத்து அங்கிருந்து கிளம்பும் பாரதியை சிட்டிக் போட்டு திரும்ப வைக்கிறார். லஷ்மி என்னோட பொண்ணு தான் என உண்மையை உடைக்க உனக்கு உண்மை தெரிஞ்சா எல்லார் முன்னாடியையும் அவளை காயப்படுத்துவ அதனாலதான் மறைத்தேன் என கண்ணம்மா கூறுகிறார்.

இந்த நேரத்தில் லட்சுமி கண்ணம்மாவை சமையல் அம்மா என கூற கண்ணம்மா நீ எங்கேயும் எப்பவும் என்னை அம்மானு தான் கூப்பிடனும் என கூறுகிறார். உடனே லஷ்மி சரிமா என பதில் அளிக்கிறார். லஷ்மியை அழைத்துக் கொண்டு வீடு திரும்புகிறார் கண்ணம்மா.

பின்னர் பாரதி அவருடைய அம்மா அப்பா மற்றும் அஞ்சலியை நிற்க வைத்து கேள்வி கேட்கிறார். தன்னுடைய அப்பா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனக்கும் அம்மா நடிகையர் திலகம் சாவித்திரி எனவும் அஞ்சலி சின்னத்திரை இளவரசி எனவும் பட்டம் கொடுத்து அவளை நிற்க்க வைத்து கேள்வி கேட்கிறார்.

என்ன பாத்தா ஜோக்கர் மாதிரி இருக்கா, உங்க எல்லாருக்கும் அது கண்ணம்மா பொண்ணு தெரிந்தும் அந்தப் பொண்ணு என்னோட பழக வச்சிருக்கீங்க என கூறி கண்ணம்மாவை திட்டித் தீர்க்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.