பாரதி கண்ணம்மா சீரியல் லட்சுமி யார் என்ற உண்மையை தெரிந்துகொள்ள பாரதி போட்டுள்ள திட்டம் கைகூடுமா?

Bharathi Kannamma Update 16.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவின் மகள் லஷ்மிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்த பாரதி லஷ்மி கண்ணம்மாவின் மகள் என தெரிந்துகொண்டு அவரை தன் வீட்டிற்கு தூக்கி வந்துள்ளார்.

இன்றைய ராசி பலன்.! (16.8.2021 : திங்கள் கிழமை)

லஷ்மியின் பெற்றோர் வந்தால் தான் அவளை கொடுப்பேன் அதுவரை நானே பார்த்துக்கொள்கிறேன் என பாரதி கூறுகிறார். லஷ்மியை எப்படியாவது கண்ணம்மாவிடம் சேர்த்துவிட அனைவரும் ஏதேதோ பேச அனைத்திற்கும் எண்டு கார்டு போடுகிறார் பாரதி.

லஷ்மிக்கு என்னாச்சு பாரதி ஏன் அங்கே கூட்டிச் சென்றார் என ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பாரதி வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கிறார் கண்ணம்மா. அத்தைக்கு கண்ணம்மா போன் செய்தும் சௌந்தர்யா எடுக்கவில்லை. அதன் பின்னர் இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு ஃபோன் செய்ய போனை எடுக்கிறார். அதோடு முடிகிறது இன்றைய எபிசோட்.

Ajith-க்கு பாடினேன் என்று கடைசி வரை தெரியாது! – Valimai Massive Update 

சௌந்தர்யாவும் கண்ணம்மாவும் புது திட்டம் போடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணம்மா பாரதி வீட்டிற்கு வருவதை தடுத்து நிறுத்தி லட்சுமி பாரதியிடம் வளர்வது போல கதை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.