கண்ணம்மா என் பொண்டாட்டி தான் உனக்கு என்ன பிரச்சனை என்ன வெண்பாவை தெறித்து ஓட வைத்துள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 30.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹாஸ்பிடலுக்கு கிளம்பி கீழே இறங்கி வந்த பாரதி கண்ணம்மா கிளம்பி விட்டதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அவர் இந்தப் பக்கம் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டு ஆன்மாவுக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்து ஷாக் ஆகிறார். ஹமா டாடி இங்க வாங்க, சமையல் அம்மா ஒண்ணு சமைச்சு கொண்டு வந்திருக்காங்க அதை சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க என கூப்பிடுகிறார். பாரதி எனக்கு வேண்டாம் எனக் கூறியும் ஹேமா அவரை விடவில்லை. அழைத்துச் சென்று அங்கு பக்கத்தில் இருக்கும் சோபாவில் அமர வைக்கிறார்.

கண்ணம்மா என் பொண்டாட்டி தான்.. உனக்கென்ன பிரச்சனை?? வெண்பாவை தெறித்து ஓட வைத்த பாரதி - பரபரக்கும் பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சாப்பிடுங்க எனவே மீண்டும் இனிப்புப் பலகாரத்தை கொடுத்தது பாரதி எனக்கு வேண்டாம் எனக் கூறுகிறார். பிறகு கண்ணம்மா அவருக்கு வேண்டாம்னா விடு, நீ சாப்பிடு ஹேமா என ஊட்டி விடுகிறார். இந்த நேரத்தில் வெண்பா வந்து நிற்க இதனைப் பார்த்த கண்ணம்மா எங்க உங்க பிரண்டு வந்து இருக்காங்க பாருங்க என சொல்கிறார். திரும்பவும் உங்க பிரண்டு வந்து இருக்காங்க பாருங்க வாங்கனு கூப்பிடுங்க என சொல்லியும் பாரதி அமைதியாக இருக்கிறார். பிறகு கண்ணம்மாவை உள்ள வாங்க என கூப்பிடுகிறார். பிறகு சௌந்தர்யா வெண்பாவிடம் என்ன விஷயம் என கேட்கிறார். பாரதியை பார்க்கலாம்னு வந்தேன் என வெண்பா சொல்ல அவ என்ன படுத்த படுக்கையாக இருக்கும் பழம் எல்லாம் வாங்கிட்டு வந்து பார்க்க என நக்கல் அடிக்கிறார்.

பிறகு பாரதியும் வெண்பாவும் அங்கிருந்து ஹாஸ்பிடலுக்கு கிளம்புகின்றனர். செல்லும் வழியில் வெண்பா பாரதியிடம் தொடர்ந்து கண்ணம்மா பற்றி பேசி அவரை வெறுப்பாக்குகிறார். ரெண்டு பேரும் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டது போல வெண்பா பேசிக்கொண்டே இருக்கிறார். பாரதி இந்த பேச்சை இதோடு நிறுத்தி விடலாம் எனக் கூறியும் கேட்காத வெண்பா தொடர்ந்து கண்டபடி பேசுகிறார். இதனால் கடுப்பான பாரதி ஆமா கண்ணம்மா என்னோட பொண்டாட்டி தான். நான் கட்டிய தாலி இல்லை அவள் கழுத்தில இருக்கு. சட்டப்படி நாங்க புருஷன் பொண்டாட்டி தான். இதுவரைக்கும் ஒரு நாள் கூட அவ உன்ன பத்தி என்னிடம் தப்பா பேசினது கிடையாது. ஏன் அவளோட வெளியே பாருங்க ஏன் லேட்டா வந்தீங்கனு அவ கேட்டது கிடையாது.

இது எங்க ரெண்டு பேரோட பிரச்சனை வலி வேதனை எதுவாக இருந்தாலும் அது எங்க ரெண்டு பேருக்கு தான். எங்க ரெண்டு பேரோட பிரச்சனையே நாங்க பேசி முடித்து விடுகிறோம். இதுல மூணாவது ஆள் தலையிடுவதை நாங்க விரும்பல. சாரி நான் விரும்பல என கூறுகிறார். இதனால் பயங்கர கடுப்பான வெண்பா நீ பேசுனது செருப்பால் அடித்தது போல இருந்தது என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இந்தப்பக்கம் பாரதி வீட்டில் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் என்ன நடந்தது என கேட்க அவர் ஹேமா மேல உயிரையே வச்சிருக்கார். இப்போ நான் ஏமாற்ற கூட்டிட்டு போக போறது கிடையாது. ஆனா அது நிரந்தரம் இல்லை ஒரு நாள் வரும்போது அவளை இங்கிருந்து கூட்டி போவேன் என கூறி சௌந்தர்யாவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறார்.

வீட்டுக்குப் போன கண்ணம்மா இங்க நடந்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.