வெண்பாவை வெறுப்பேத்துகிறார் ரோகித்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் லட்சுமி ஸ்கூல் தனியாக உட்கார்ந்திருக்கேன் அப்போது வந்த நண்பர்கள் ஹேமா இந்த ஸ்கூல்ல விட்டு போக போற டிசி வாங்க போறதா மிஸ் பேசிகிட்டு இருக்காங்க, உனக்கு தெரியாதா என கிண்டல் அடிக்கின்றனர். இந்த நேரத்தில் மிஸ் வர அவரிடம் லட்சுமி இது குறித்து கேட்க அவரும் ஆமாம் என சொல்ல லட்சுமி வருத்தப்படுகிறார்.

வெண்பாவை வெறுப்பேத்தும் ரோஹித்... பாரதிக்கு செய்த சத்தியத்தால் ஹேமா எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

வீட்டில் ரூமை விட்டு வெளியே வராத வெண்பாவை சந்தித்து சர்மிளா சாப்பிட கூப்பிட வெண்பா வர மறுக்கிறார். வணக்கம் ரோகித்துக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு இனி உங்க ரெண்டு பேருக்கும் கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். நீ வருத்தப்பட்டாலும் சரி சாப்பிடாம உண்ணாவிரதம் இருந்தாலும் சரி கல்யாணம் நடக்கும் என சர்மிளா கூறுகிறார். இந்த நேரத்தில் ரோஹித் வர ஷர்மிளா ரூமில் இருந்து வெளியே செல்ல வெண்பாவை வெறுப்பேத்துகிறார்.

அடுத்ததாக விக்ரம் ஹாஸ்பிடலில் அமைச்சர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட இருப்பதால் போலீஸ் அதிகாரிகள் வந்து மருத்துவமனையில் ஆய்வு செய்கின்றனர். கண்ணம்மா அதற்கு ஒத்துழைப்பு தருகிறார்.

வெண்பாவை வெறுப்பேத்தும் ரோஹித்... பாரதிக்கு செய்த சத்தியத்தால் ஹேமா எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பின்னர் வீட்டில் பாரதி ஹேமாவிடம் உனக்கு பெரிய ஸ்கூல்ல அட்மிஷன் வாங்கி இருக்கேன் நாளைக்கு நீ அந்த ஸ்கூலுக்கு போக போற, உனக்கு ஓகே தானே என சொல்ல பாரதியிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்காக உங்களின் சந்தோஷம் தான் எனக்கு சந்தோஷம் என ஹேமா கூறுகிறார். பிறகு பாரதி போனில் பேசிவிட்டு உள்ளே வர அப்போது அவருடைய அப்பா ஹேமா ரொம்ப வருத்தப்பட படிக்கிற ஸ்கூல்லையே படிக்கட்டும் என கேட்டுக்கொள்ள பாரதி ஹேமா இதற்கு ஓகே சொல்லிட்டா நீங்க எதுவும் எடுக்காதீங்க என முகத்தில் அடித்தால் போல சொல்லி விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.