ஹேமாதான் உன் பொண்ணு என கண்ணம்மாவிடம் உண்மையை கூறியுள்ளார் சௌந்தர்யா.

Bharathi Kannamma Episode Update 09.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா பாரதியை விவாகரத்து செய்தால் குழந்தையை தந்து வடுவதாக கூறியதை நம்பி பாரதியை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார் கண்ணம்மா. அதற்கான நோட்டீஸில் கையெழுத்துப் போட ஆயத்தமாகும் போது சௌந்தர்யா லக்ஷ்மியுடன் வருகிறார்.

லட்சுமி அம்மா இரண்டு நாளா சரியா சாப்பிடலை தூங்கல எப்ப பாத்தாலும் அழுதுட்டு இருக்காங்க என நீங்களாச்சும் கேளுங்கள் என கூறுகிறார். லஷ்மி பிரண்டோட விளையாட சொல்லி அனுப்பிவிட்டு கண்ணம்மாவிடம் என்ன என்று விசாரிக்கிறார் சௌந்தர்யா. சௌந்தர்யாவை கண்ணம்மா அத்தை என கூப்பிடாமல் மேடம் என்று கூப்பிடுகிறார். எதற்கு மேடம் என்று கூப்பிட்ட என்னாச்சு உனக்கு எனக் கேட்கிறார் கண்ணம்மா. எல்லா பிரச்சினைக்கும் நாளைக்கு முடிவு கிடைக்கும் என கூறுகிறார். எனக்கு என்னுடைய இரண்டாவது பொண்ணு வேண்டும். இனிமே எங்களோட வாழ்க்கையில தலையிடாதீர்கள். நீங்க எங்கேயாவது கண்காணாத ஊருக்கு போய் விடுகிறோம் என கண்ணம்மா அழுகிறார். கண்ணம்மா விவாகரத்து நோட்டீஸ் சௌந்தர்யாவிடம் இருந்து மறைக்க முயற்சித்த போது அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சௌந்தர்யா அதை கிழித்து விடுகிறார். உன்னுடைய இரண்டாவது குழந்தை யார்கிட்ட இருக்குனு நீ நம்புற நீ பாரதியை விவாகரத்து செய்தால் உனக்கு எப்படி குழந்தை கிடைக்கும் எனக் கேட்கிறார். என்கிட்ட எதுவும் கேட்காதீங்க எனக்கு இரண்டாவது குழந்தை வேண்டும் அதற்காக நான் என்ன வேணாலும் செய்வேன்‌. அவ பிஞ்சு குழந்தை எனக்கே இவ்வளவு வலிக்குதுன்னா அனாதையா தெருத்தெருவாக பிச்சை எடுத்துட்டு இருக்கா.. அவளை நான் பாக்கணும் கொஞ்சனும் எட்டு வருஷமா கொடுக்காத பாசத்தையும் அன்பையும் கொட்டிக் கொடுக்கணும் என அழுகிறார். கண்ணம்மா சொல்பேச்சை கேட்காததால் சௌந்தர்யா பளார் என ஒரு அறை விடுகிறார். ‌ ‌‌‌‌‌

உன்கிட்ட யாரோ பொய் சொல்லி ஏமாத்திட்டு இருக்காங்க என சௌந்தர்யா கூறுகிறார். உன் பொண்ணு தன் வீட்டில நல்லபடியா இருக்கா என சௌந்தர்யா கூறுகிறார். என் பொண்ணு எங்க இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா அது எப்படி இருப்பா என கேட்கிறார் கண்ணம்மா. அப்படியே உன்னை மாதிரி கருப்பா, உன்னோட குணம், உன்னோடு பேச்சு, உன்ன மாதிரியே விட்டுக் கொடுத்துப் போகிறது என எல்லாத்தையும் உன்ன மாதிரியே இருப்பா. அவ வேற யாரும் இல்ல சமையல் அம்மா சமையல் அம்மானு உன்ன சுத்தி சுத்தி வந்த ஹேமா தான் நீ பெத்த பொண்ணு என கூறுகிறார். ஹேமா என அழ தொடங்குகிறார் கண்ணம்மா. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.