ரோஹித்தை மடக்கிப்பிடித்த வெண்பா கேள்வி கேட்க கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி உள்ளார் பாரதி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோகித் தன்னுடைய நண்பனை பார்த்து பணத்தை கொடுக்கச் சென்று இருந்த போது அவருடைய நண்பன் காலையில் உனக்கு போன் பண்ணி வேற யாரோ எடுத்தாங்க எதுவும் பிரச்சனை இல்லையா என கேட்க அதிர்ச்சி அடைகிறார். பிறகு என்ன நடந்துச்சு என கேட்க நான் போன் பண்ணி மாமியார் கிட்ட பணத்தை உஷார் பண்ணிட்டியா என்று உளறிக்கிட்டு இருந்தேன் அந்த நேரத்துல வேற யாரோ பேச உடனே ராங் நம்பர் மாதிரி பேசி போனை வைத்துவிட்டேன் என சொல்கிறார்.

ரோஹித்தை மடக்கிப்பிடித்த வெண்பா.. கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

பேசியது யாரு பேர் என்ன சொன்னாங்க வெண்பாவா என கேட்க இல்ல வேற ஏதோ பேர் சொன்னாங்க என சொல்ல சாந்தியா என கேட்க ஆமாம் அதே தான் என கூறுகிறார். பிறகு ரோகித் வெண்பாவிற்கு கண்டிப்பாக சந்தேகம் வந்திருக்கும் எப்படி சமாளிப்பது என திட்டம் போடுகிறார்.

இந்த பக்கம் சிகிச்சைக்காக வந்துள்ள ஜானு மூச்சு திணறல் ஏற்பட்டு அவருடைய கணவரை எழுப்ப முயற்சி செய்ய அவர் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து பெல் அடிக்க வெளியில் இருந்து கண்ணம்மா மற்றும் நர்ஸ் ஒருவர் உள்ளே வந்து என்னை ஏது என விசாரிக்கின்றனர். பிறகு ஜானு கண்ணம்மாவிடம் எனக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் ரிப்போர்ட்ல பிரச்சனை இருக்குன்னு தெரியவந்தா அவரிடம் சொல்ல வேண்டாம் எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்ல சொல்லு என பாரதியிடம் சொல்லுமாறு கூறுகிறார்.

பிறகு பாரதியும் விக்ரமும் இந்த ரிசல்ட் குறித்து பேசும் போது அவர்களுக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் பிரச்சனை இருக்கு இன்னும் நாலு ஐந்து மாதம் தான் உயிரோடு இருப்பாங்க. அப்படியே ஆபரேஷன் செய்ய நாளும் அவங்களுக்கு சுகர் அதிகமா இருக்கு வயது அதிகமா இருக்கு அதனால அது ரிஸ்க் என பாரதி கூறுகிறார். இந்த நேரத்தில் ஜான் சொன்னதை கண்ணம்மா பாரதியிடம் சொல்ல அவர் பேஷண்ட் கிட்ட போய் நீங்க நாலு மாசத்துல செத்து போயிடுவீங்கன்னு சொல்ல முடியுமா? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு எனக்கு நீ கிளாஸ் எடுக்க வேண்டாம். போய் கேண்டின்ல டிவில நாட்டு சக்கர போட்டு இருக்காங்களா போண்டா சூடா இருக்கான்னு பாரு என அசிங்கப்படுத்தி வெளிய அனுப்புகிறார்.

ரோஹித்தை மடக்கிப்பிடித்த வெண்பா.. கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்த பக்கம் வெண்பா ரோஹித் தப்பவிட்டதால் செம கடுப்பில் இருக்க அந்த நேரத்தில் ரோஹித் உள்ளே வருகிறார். நீ யாருன்னு தெரிஞ்சு போச்சு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டிய ஆளு. பணக்காரன் சொல்லி என்னையும் எங்க அம்மாவையும் ஏமாத்திக்கிட்டு இருக்க. உண்மையை சொல்லு என சொல்ல நான் யாருன்னு உண்மையை சொல்கிறேன் என ரோகித் நான்தான் ரோகித் சாரதி என ஆரம்பிக்கிறார். என்ன பார்த்து பிராடு என்று சொல்லிட்ட. எப்படி நீ அப்படி சொல்லலாம் என சொல்ல வெண்பா ஷாக்காகி நிற்க இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.