காதலியுடன் பாரதிகண்ணம்மா அருண் எடுத்த புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண் பிரசாத். மேயாத மான் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் இந்த படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவரும் ராஜா ராணி சீரியல் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் தீயாக பரவின. இப்படியான நிலையில் தற்போது முதல்முறையாக பாரதி அர்ச்சனா உடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்