கண்ணம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சௌந்தர்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான செய்திகள் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா செய்து கொடுத்த கைவினைப் பொருளை சௌந்தர்யா சீப் கெஸ்ட் ஜெயிலர் அம்மாவுக்கு கிப்ட் ஆக கொடுக்க அதைப் பார்த்த அவர் ஜெயிலில் இருப்பவர்கள் செய்வது போலவே இருக்கிறது என சந்தேகப்பட்டு அதை செய்த பெண்ணை பார்த்து பாராட்ட வேண்டும் என சொல்கிறார்.

இதனால் செல்வம் கண்ணம்மாவிடம் வந்து ஜெயிலர் அம்மா கூப்பிடுவதாக சொல்லிக் கூப்பிட அவரிடமிருந்து தப்பிக்க கண்ணம்மா காலில் கிழித்துக்கொள்ள பிறகு அவரை முதலுதவி செய்வதற்காக அழைத்துச் சென்று விடுகின்றனர். இந்த விஷயம் கேள்விப்பட்டதும் ஜெயிலர் அம்மா அப்போ நாமலே மேலே போய் பார்த்திடலாம் என மேலே வருகிறார்.

இந்த நேரத்தில் அவருக்கு போன் கால் வந்து அவசரமாக நீங்கள் கிளம்பி வர வேண்டும் என சொல்ல அவர் கிளம்பிச் சென்று விடுகிறார். ஒரு வழியாக ஜெயிலர் அம்மாவிடமிருந்து தப்பித்த கண்ணம்மா நிம்மதியாக இருக்க சௌந்தர்யா கைவினைப் பொருள் பற்றி பாராட்டி எங்க ஸ்கூலில் வேலைக்கு சேர்ந்து இங்கே இருக்க பிள்ளைகளுக்கு இதுபோல செய்ய கற்றுக் கொடுக்கிறியா என கேட்க கண்ணம்மா டபுள் ஓகே என கூறுகிறார்.

அதன் பிறகு சண்முக வாத்தியாரிடம் இது பற்றி கேட்க அவரும் நீங்க எடுக்கிற முடிவு சரியா தான் இருக்கும் என சொல்ல கண்ணம்மா சந்தோஷப்படுகிறார். இந்த விஷயத்தை மது பாரதியிடம் சொல்ல பாரதி சௌந்தர்யாவிடம் கோபப்பட சௌந்தர்யா நடந்த விஷயங்கள் அனைத்தையும் கேட்டேன் தப்பு உங்க மேல தான் என சொல்லி அந்த பொண்ணோட திறமையை பாராட்டி வேலை கொடுத்தேன் என்று சொல்லி பாரதியை ஆஃப் ஆக்குகிறார்.

அதன் பிறகு வீட்டுக்கு வரும் கண்ணம்மா தன்னுடைய அக்கா சாந்தியிடம் மற்றும் அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர். இந்த விஷயத்தை கேட்ட அகிலன் நீ வேலைக்கு போனா எனக்கு பாக்கெட் மணி கொடுத்துடனும் என சொல்கிறான்.

அடுத்து கண்ணம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் அதனால இன்னைக்கு நானே சமைக்கிறேன் என சொல்லி சமைக்க செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.