பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற இன்னும் எத்தனை கோடி வசூல் தேவை என தகவல் கசிந்துள்ளது.

Beast Victory Collection Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இந்த படத்தின் வசூல் நல்ல விதத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

பீஸ்ட் படத்தை திரையிட்டு வந்த பல திரையரங்குகள் படத்தை எடுத்துவிட்டு கே ஜி எஃப் படத்தை திரையிட தொடங்கி வருகின்றனர். மேலும் பல ஸ்கிரீன் உள்ள திரையரங்குகளில் பீஸ்ட் படத்திற்கு குறைந்த அளவிலான ஸ்கிரீன்களே ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இதுவரை 150 கோடி வரை இந்த படம் வசூல் செய்துள்ள நிலையில் இன்னும் 30 கோடி ரூபாய் வசூல் செய்தால் மட்டுமே பீஸ்ட் திரைப்படம் லாபக் கணக்கில் சேரும் என சொல்லப்படுகிறது.

வரும் நாட்களில் பீஸ்ட் திரைப்படம் 30 கோடி வசூலித்து லாபக் கணக்கில் சேருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.