நடிகை ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது வெற்றியாளராக வெற்றி பெற்ற ஷிவினுக்கு செண்டை மேளங்களுடன் கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேவரைட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்நிகழ்ச்சி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த 21 போட்டியாளர்களும் தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தனர். அண்மையில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுக்கு , ஷிவின், விக்ரமன் மற்றும் அசீம் தேர்வாகியிருந்தனர். இறுதி போட்டியில் முதல் நபராக ஷிவின் எலிமினேட் ஆனார். அதன் பின்னர் அசீம் டைட்டில் வின்னராக 50 லட்சம் ரூபாயை வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்த ரச்சிதா வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், “என் பாப்பாவை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்க ஒரு சிறிய முயற்சி. இதற்கு ஷிவின் மிகவும் தகுதியானவர். மக்களின் வெற்றியாளர் ஷிவினை வரவேற்கிறோம்” என ரச்சிதா பதிவிட்டுள்ளார். மேலும் ஷிவினின் வரவேற்பு தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்ச்சியின் மூலம் நெருங்கிய நண்பர்களாக மாறியிருக்கும் ஷிவின் & ரச்சிதா இருவரையும் ரசிகர்கள் பாராட்டி இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.