முருகதாஸ்

சர்கார் படத்தின் கதை செங்கோல் கதை என நான் ஒப்பு கொண்டால் என்னை தவறாக பேசுவார்கள் என முருகதாஸ் முதலில் ஒப்பு கொள்ள மறுத்ததாக பாக்யராஜ் கூறியுள்ளார்.

சர்கார் தொடர்பான வழக்கு இன்று முடிவுக்கு வந்தது, இந்த விவகாரத்தில் முருகதாஸும் வழக்கு தொடரிருந்திருந்த வருண் ராஜேந்திரனும் சமரசமாக பேசி முடித்து கொண்டனர்.

இதனையடுத்து பேட்டி அளித்த பாக்யராஜ் முதலில் சமரச பேச்சு வார்த்தையில் முருகதாஸ் இது வருண் கதை என ஒப்பு கொண்டால் என்னை தவறாக பேசுவார்கள் என கூறி ஒப்பு கொள்ள மறுத்ததாக கூறியுள்ளார்.

அதன் பின்னர் முருகதாஸிடம் வருணின் நிலைமையை எடுத்து கூறிய பின்பு படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரனின் பெயரை பதிவிட ஒப்பு கொண்டதாக கூறியுள்ளார்.

இதனை முருகதாஸ் தற்போது வெளியிட்டு இருந்த விடியோவில் கூறியிருந்தார்.

AR.Murugadoss Explains Sarkar Story Theft Issue | Sarkar | Kollywood | kalakkal cinema