சூட்கேஸை தூக்கி வந்த பாக்கியாவால் கோபிக்கு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இதுவரை நடந்து முடிந்த எபிசோடுகளை பாக்யா சூட்கேஸை தூக்கிக் கொண்டு கீழே வந்து நிற்க அனைவரும் அவர் வெளியே போகப் போகிறார் என நினைத்து அவரை தடுக்க முயல்கின்றனர். ஆனால் கோபி பாக்யாவை வீட்டை விட்டு வெளியே போய் என தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார்.

சூட்கேஸை தூக்கி வந்த பாக்யா.. கடைசியில் காத்திருந்த செம டுவிஸ்ட்.. அதிர்ச்சியில் கோபி - பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.!!

இப்படியான நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் செம ட்விஸ்ட் ஒன்று காத்துக் கொண்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் கோபி சொல்லிக்கிட்டே இருக்கேன் வெளியே போ என சூட்கேஸை தூக்கி வீசி எறிய சூட்கேஸில் மொத்தமும் கோபியின் டிரஸ் ஆக இருக்கிறது.

சூட்கேஸை தூக்கி வந்த பாக்யா.. கடைசியில் காத்திருந்த செம டுவிஸ்ட்.. அதிர்ச்சியில் கோபி - பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.!!

இதனால் நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகணுமா என பாக்யாவை கோபி அறைய வர ஆம்பளைங்க நீங்க தப்பு பண்ணுவீங்க பொம்பளைங்க அழுதுகிட்டு நடுரோட்டில் போய் நிக்கணுமா? இது என் வீடு என்ன வீட்டை விட்டு வெளியே போக சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என பாக்கியா கேட்க கோபி அதிர்ச்சி அடைகிறார். இதனால் வரும் நாட்களில் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Baakiyalakshmi | 15th to 20th August 2022 - Promo