ராதிகாவிடம் வசமாக சிக்கி உள்ளார் கோபி.

Baakiyalakshmi Serial Upcoming Episode Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தன்னுடைய குடும்பத்துக்குத் தெரியாமல் ராதிகாவுடன் நெருங்கி பழகி வந்தார் கோபி. இந்த விஷயம் அவருடைய அப்பாவுக்கு தெரிய பல ட்விஸ்ட்களோடு தற்போது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

வெள்ளி, செவ்வாய் ஜோதி வழிபாடு ஏன்?

இந்த நிலையில் கோபி மற்றும் பாக்கியா இருவரும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்ல அந்த நிகழ்ச்சிக்கு ராதிகாவும் வருகை தந்துள்ளார். அப்போது கோபி மற்றும் பாக்கியா ஒன்றாக இருப்பதை பார்த்த ராதிகா கோபி சொன்னதை எல்லாம் பொய்யான கண்கலங்கி கொண்டு திரும்பிச் செல்கிறார்.

ராதிகாவுக்கு விஷயம் தெரிந்து விட்ட நிலையில் கோபி என்ன செய்யப்போகிறார்? சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போவது என்பது குறித்த எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து வெளியான ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சீரியல் மாதிரி இருக்கு படம் – Annaatthe Day 3 Family Audience Review | Rajini, Nayanthara | HD