ஆகாஷ் வீட்டுக்கு சென்ற இனியா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ஆகாஷ் வீட்டிற்கு இனியா செல்ல, ஈஸ்வரி பாக்யாவிடம் வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபிக்கு ஈஸ்வரி சாப்பாடு செய்து கொடுக்க அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்கியா போன் பேசிக் கொண்டே வர தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்லும்போது ஈஸ்வரி பாக்கியாவை அழைத்து உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு விஷயம் பேசணும் என உட்கார வைக்கிறார். என்ன விஷயம் என்று கேட்க செழியன் கிட்ட ஃபங்ஷன்ல பேசல அவன் இங்க வர்றதை பற்றி நீ என்ன நினைக்கிற அவங்க அங்கேயே வச்சுப்பாங்க ஜெனி வீட்ல பையன் இல்லாததுனால செழியணும் அவங்க இங்க வர விட மாட்டாங்க என்றெல்லாம் பேச அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அத்தை நீங்க எதுக்கு இவ்வளவு தூரம் யோசிக்கிறீங்க என்று சொல்ல அப்போ உன் பையன் மேல உனக்கு அக்கறை இல்லையா உன் பையன் உன்னோட கண்ட்ரோல்ல இருக்கணும்னு நினைக்க மாட்டியா என்று சொல்ல அதெல்லாம் நான் என்னைக்குமே நினைக்க மாட்டேன் என் பசங்க எனக்கு முக்கியம் தான் ஆனா அவங்க வளந்துட்டாங்க அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்தாச்சு இதுக்கு அப்புறம் அவங்க எங்க இருக்கணும் எப்படி இருக்கணும் என்ற முடிவு அவர்களுடைய அதுல நான் தலையிட மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார்.
நீங்களும் அத பத்தி ரொம்ப யோசிக்காதீங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட ஈஸ்வரி கோபியிடம் எப்படி பேசுறா என்று சொல்ல பாக்யா சொன்னதெல்லாம் என்னமோ தப்பு இருக்கு அவ கரெக்டா பேசுற அவங்க அவங்களுக்கு முடிவு எடுக்குற அளவுக்கு திறமை இருக்கு அவங்க எங்க இருக்கணும்னு நினைக்கிறாங்களோ அங்கேயே இருக்கட்டும் இதுல நம்ம என்னமோ சொல்ல முடியும் என சொல்லி விடுகிறார். மறுபக்கம் ரெஸ்டாரண்டில் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி பில் கொடுக்க வர, டிவியை பார்க்கிறார் அதில் எழில் இன்டர்வியூ ஓடிக்கொண்டே இருக்க காலையிலிருந்து இதே ஓடிக்கிட்டு இருக்கு மாத்த வேண்டியதானே என்று சொல்ல பாக்கியா அக்கா மாத்தக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று அவர் சொல்லுகிறார் உடனே செல்வி பரவால்ல நான் மாத்துவேன் என்று ரிமோட்டை வாங்கி மாற்றப் போக பாக்யா வந்து ரிமோட்டை வாங்கி விடுகிறார். என்னாச்சு அக்கா என்று சொல்ல என்ன பண்ண போற என்று கேட்கிறார் இல்ல இதே ஓடிக்கிட்டு இருக்கு அதனால மாத்த போறேன் என்று சொல்லுகிறார். அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல என்று சொல்ல ஊர் கண்ணு பட்டுட்டா பொல்லாததுகா என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் படாது என்று சொல்லி அந்த வீடியோவை பார்த்து ஏழில் பேசுவதை மனப்பாடமாக பாக்யா பேசுகிறார். பிறகு ரெஸ்டாரண்டுக்கு வந்தவர்களிடம் எழிலைப்பற்றி பெருமையாக பேசி கொள்கிறார் பாக்யா.
மறுபக்கம் இனியா ஆகாஷ் பார்க்க செல்வியின் வீட்டிற்கு வருகிறார் இனியாவை பார்த்த ஆகாஷ் பதறி ஏன் இங்கு வந்தாய் என்று கேட்கிறார் யாராவது பார்த்தா என்ன ஆகிறது என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நான் கொடுக்க வேண்டியது கொடுத்துட்டு போயிடுறேன் என்று சொல்லி ஆகாஷ் இடம் புக் ஒன்றை கொடுக்கிறார். இதனை வாங்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா என்று கேட்க ஆமா இது 2000, 3000 ஆயிருக்குமே என்று சொல்ல ஆமா அவ்வளவுதான் ஆச்சு அம்மா பாக்கெட் மணிதான் கொடுத்த காசு சேர்த்து வைத்திருந்தேன் அதுல இருந்து தான் வாங்கினேன் என்று சொல்ல நீ உனக்காக செலவு பண்ணி இருக்கலாம் இனியா எனக்காக எதுக்கு பண்ணு என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நான் அந்த வேலை முடிஞ்சிடுச்சு நான் கிளம்புறேன் என்று சொல்ல ஆகாஷ் வந்தவுடனேயே கிளம்புற ஏதாவது சாப்பிடறியா என்று கேட்க இப்பயாவது கேட்டியே என்று சொல்ல அதற்கு ஆகாஷ் உடனே நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொல்லுகிறார் உடனே எட்டி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து பேசிக் கொண்டிருக்க செல்வி வந்துவிட இனிய பதறிப்போய் ஒளிந்து கொள்கிறார்.
ஒரு வழியாக செல்வி போன் எடுக்க வந்ததாக சொல்லி எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார் உடனே ஆகாஷ் மற்றும் இனிய இருவரும் பேசிக்கொள்ள ஆகாஷ் நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொல்ற நாள் என்னைக்கு வருமோன்னு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்ல இனியா எனக்கும் அந்த பயம் இருக்கு ஆனா அதைவிட எல்லாமே சரி பண்ணிடலாம் என்று தைரியமா இருக்கு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
எழில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் இருக்கு என சொல்ல அவர் என்ன சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
