Web Ads

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யாவிற்கு வந்த சந்தேகம்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலில் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 19-02-25
Moondru Mudichu Serial Today Promo Update 19-02-25

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சூர்யா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யாவிற்கு ஒன்னுமில்ல நீ ரிலாக்ஸா இரு என்று சொல்ல, இல்லங்க என்னால அப்படி இருக்க முடியல ஓடி ஆடி சந்தோஷமா இருந்தா இப்போ நோய் வந்த மாதிரி படுத்து கிடக்கிறான் என்று சொல்லி கண் கலங்குகிறார். அருணாச்சலம் அவன் குடிச்சதுனால தான் இப்படி ஆயிருக்கு என்று சொல்ல அவன் இவ்வளவு நாளா குடிக்கலையா என்று கேட்கிறார் உடனே மாதவியும் சுரேகாவும் முதல்ல அப்பா எங்க கிட்டயும் குழந்தை பெத்துக்குற மருந்துன்னு சொன்னாரு. அப்புறம்தான் குடியை நிறுத்துற மருந்துன்னு சொல்றாரு என்று சொல்ல நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருங்க நீங்கதான் அவ்வளவு உசுப்பேத்திக்கிட்டு இருக்கீங்க என்ற திட்டுகிறார்.

உடனே சுந்தரவல்லி கோபப்பட்டு எனக்குன்னு எதுவுமே யோசிக்க தெரியாதா? உங்ககிட்ட தெரியாம தான் கேட்கிறேன் நீங்க சூர்யாவுக்கு அப்பாவா? இல்ல அவளுக்கு அப்பாவா? அவ மேல எந்த பழியும் விழுந்துட கூடாதுன்னு அப்படி துடிக்கிறீங்க என்று கேட்கிறார். அந்த நேரம் பார்த்து நந்தினியும் விஜியும் ஆட்டோவில் வந்து இறங்க கண்டிப்பா உள்ள போய் தான் ஆகணுமா என்று கேட்க அப்போ என்ன கிராமத்துக்கு போக போறேன்னு சொல்ல போறியா என்று சொல்ல இல்லக்கா சுந்தரவல்லி அம்மா ஹாஸ்பிடல்ல என் மேல ரொம்ப கோபப்பட்டாங்க நம்ப வேணா ஒரு ரெண்டு நாள் உங்க வீட்ல இருந்துட்டு போலாம் என்று சொல்ல அதெல்லாம் தப்பா ஆயிடும் நந்தினி சூர்யா அண்ணனை நீ வந்து பார்க்க வேண்டாமா என்று சொல்லி வற்புறுத்தி அழைத்து செல்கிறார்.

நந்தினியும் விஜயும் ரூமுக்கு வந்தவுடன் சுந்தரவல்லி இவளை யார் இங்கு வர சொன்னது இங்க இருந்து வெளியே போடி என்று துரத்த அருணாச்சலம் அதட்டுகிறார் உடனே சுந்தரவல்லி உங்களுக்கு என்னங்க பிரச்சனை ஒரு ஒரு வாட்டியும் இவளுக்கு சப்போர்ட் பண்றதுனாலதான் சூர்யா இப்படி இருக்கான் என்று கோபப்பட, அருணாச்சலம் நந்தினி சூர்யாவுக்கு கொடுத்தது குடியை நிறுத்துறதுக்கான மருந்து மட்டும்தான் வேற ஒன்னும் இல்ல என்று சொல்ல நான் சொல்றது தான் உங்களுக்கு புரியல ஆனா டாக்டர் சொல்றது உங்களுக்கு புரியலையா என்ற கோபப்பட அதெல்லாம் இல்லம்மா சூர்யாவுக்கு மருந்து கொடுத்து ஏதாவது பண்ணிட்டு சொத்து ஏமாத்திட்டு போறதுக்காக பண்றா என்று சுரேகா சொல்ல அருணாச்சலம் கோபப்பட்டு சுரேகாவை திட்டுகிறார். சூர்யாவை நந்தினி ஏதாவது பண்ணனும்னா அவ மருந்தை கலக்கி கொடுக்கணும்னு அவசியம் இல்ல ஒரே ரூம்ல தான் இருக்கா என்ன வேணா பண்ணிட்டு போயிடலாம் என்று சொல்ல, இப்போ இந்த மூஞ்சிய சந்தன குங்குமம் வச்சு வர வைக்கணும்னு சொல்றீங்களா என்று கோபப்பட அவ மேல பழி போடாதீங்க என்று தான் சொல்றேன். சூர்யா ஹாஸ்பிடல் சேத்ததுக்கு அப்புறம் அவ எங்க போனா என்ன பண்ணா என்று உங்களுக்கு தெரியுமா என்று அருணாச்சலம் சூர்யாவிற்காக நந்தினி செய்த விஷயங்கள் பற்றி சொல்லுகிறார்.

சூர்யா உயிர்பிழைத்து வந்ததற்கு காரணம் டாக்டர் ஒரு பக்கம் என்றால் நந்தினி ஒரு பக்கம் நந்தினி வேண்டுதல் காண பலன் தான் சூர்யா உயிர் பொழைச்சு இருக்கான் என்று சொல்ல அப்போ இவ உயிர் பிச்சை போட்டு என் பையன் உயிரோட வந்து இருக்கானா என்று கோபப்பட்டு சுந்தரவல்லி சென்றுவிட உடனே மாதவி, சுரேகா ,அசோகன் மூவரும் சென்று விடுகின்றனர். பிறகு அருணாச்சலம் நந்தினி இடம் யார் எது வேணா சொல்லட்டுமா நீ எதைப் பற்றியும் நினைக்காத சூர்யா பொழச்சி வந்துட்டா நீ போய் அவன பாரு என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் கிளம்பி விட நந்தினி சூர்யா எதிரில் வந்து நின்று எல்லாத்துக்கும் காரணம் நான் தான் நீங்க இந்த நிலைமையில் இருக்குறதுக்கு நான் தான் காரணம் உங்களை குடியிலிருந்து நிக்க வச்சுட்டா நான் சீக்கிரம் ஊருக்கு போடலாம்னு நெனச்ச அதனாலதான் உங்களுக்கு நாட்டு மருந்து வாங்கி கொடுத்த ஆனா இது மாதிரி பிரச்சனை வரும்னு தெரியாது. இப்படி ஆகும்னு தெரிந்திருந்தானா செஞ்சிருக்க மாட்ட, ஒரு வகையில பார்த்தா இது என்னோட சுயநலம்தான் நீங்க மயங்கி கீழே விழுந்த போது எனக்கு ஈர கொலையே நடுங்கி போச்சு. உங்களுக்கு ஏதாவது ஆயிருந்தா நான் அந்த குற்ற உணர்ச்சியிலேயே செத்துப் போய் இருப்ப, என்ன மன்னிச்சிடுங்க என்று அழுகிறார். கருப்பசாமி சத்தியமா உங்களுக்கு நான் வேற எந்த மருந்தையும் கொடுக்கல குடிய நிறுத்துற அந்த நாட்டு மருந்து மட்டும்தான் கொடுத்த, இனிமே உங்களுக்கு நான் எந்த மருந்தையும் கொடுக்க மாட்டேன், உங்களுக்கு எதுவும் பண்ண மாட்டேன் இருக்கிற வரைக்கும் இந்த வீட்ல ஓரமா இருந்துட்டு போயிடுறேன் என்று சொல்லி அழ சூரியா கண் முழித்து வீட்டுக்கு வந்துட்டோமா என்று கேட்கிறார்.

எனக்கு என்ன ஆச்சு நந்தினி எதனால எனக்கு இப்படி ஆச்சு என்று என்று மயங்கி விழுவதற்கு முன் நடந்த விஷயங்களை சூரியா நந்தினி இடம் சொல்லுகிறார். நான் எப்பவுமே தான் குடிப்பேன் இப்ப மட்டும் இப்படி ஆச்சு என்று கேட்க எல்லாத்துக்கும் காரணம் நான் தான் என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்லுகிறார். உங்களுக்கு இப்படி ஆனதுக்கு காரணம் நீங்க குடிச்சது மட்டும் இல்ல அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு என்று சொல்ல ஆரம்பிக்க அருணாச்சலம் நந்தினியை அழைத்து சென்று விடுகிறார். உடனே விஜியிடம் நீ பேசிட்டு இருமா என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். விஜி அவரிடம் என்ன அண்ணே எல்லாரையும் இப்படி பயமுறுத்துட்டீங்க என்று கேட்க அவ்வளவு சீரியஸ் ஆயிடுச்சா என்று கேட்க, உயிர் பொழைப்பதே கஷ்டம்னு சொல்லிட்டாங்க நாங்க எல்லாரும் பதறிப் போயிட்டோம் என்று சொல்லுகிறார்.

பார்த்து இருங்க அண்ணா இதுக்கு மேலயாவது குடிக்காமல் இருங்க, என்று அட்வைஸ் கொடுக்க பாப்போம் என்று சூர்யா சொல்ல, நீங்க ஒன்னும் இப்போ பேச்சுலர் கிடையாது உங்கள நம்பி ஒருத்தி இருக்கா என்று சொல்ல யாரு நந்தினியா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார். உங்களுக்காக நந்தினி என்னவெல்லாம் பண்ணி இருக்கா தெரியுமா என்று கோவிலில் செய்த பரிகாரங்கள் பற்றி சூர்யாவிடம் சொல்ல இதெல்லாம் தேவையா என்று கேட்க நீங்க வேணா நம்பாம இருக்கலாம் ஆனா ஆனால் நந்தினி அதெல்லாம் நம்பரா நீங்க உடம்ப பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அருணாச்சலாய் நந்தினி இடம் இப்ப எதுக்குமா அவன்கிட்ட சொல்ல போற அதை சொல்லி நீ என்ன பண்ண போற என்று கேட்க ஆயிரம் இருந்தாலும் நான் கொடுத்த மருந்தால தானே இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல டாக்டர் நாட்டு மருந்து நாள் எல்லாம் ஒன்னும் ஆகல வேற ஏதோ தப்பான மருந்து கலந்திருக்கு என்று தானே சொன்னாரு என்று சொல்ல இருந்தாலும் ஒரு குற்ற உணர்ச்சியா இருக்குதய்யா என்று சொல்லுகிறார். இந்த வீட்ல இருக்கிறவங்க எல்லாத்துக்கும் காரணம் நீதானே சொன்னாலும் எது நடந்ததுன்னு நம்ம மனசாட்சிக்கு தெரியும் நீ எதுவும் கவலைப்படாதே என்று சொல்ல சூர்யா சார் இப்படி படுத்து இருக்கிறதை பார்க்கும்போது எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்ல அருணாச்சலம் தயவுசெய்து இதை மட்டும் சொல்லாத என்று சொல்லுகிறார். அது உண்மை கிடையாது என்று சொல்ல, அது உண்மையா இல்லையா என்று தெரியாது ஆனால் அவர்கிட்ட மன்னிப்பு கேட்கல நான் எனக்கு மனசு உருத்தி கிட்டே இருக்கும் என்று சொல்ல, முதல்ல நான் பேசுறது கேட்டுட்டு அப்புறம் நீ பேசு என்று சொல்லி இதை போய் நீ சூர்யா கிட்ட சொல்றதுனால ஒன்னும் வரப்போறதில்லை என்று சொல்லுகிறார்.

இந்த விஷயத்தை நீ சொன்ன குடியிலிருந்து நிறுத்துறது ரொம்ப கஷ்டமாயிடும். உன்கிட்ட இருந்து ஒரு டீ காபி கூட வாங்கி குடிக்க மாட்டான் என்று சொல்ல அதற்கு நந்தினி இதுக்கு மேல நான் எதுவும் செய்ய மாட்டேன் ஐயா அவர் குடியிலிருந்து நிறுத்த நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் நீயே இப்படி சொன்னா எப்படிமா இந்த வீட்டுக்கு நீ வந்த நாளிலிருந்து அவன் தொடர்ந்து ரெண்டு நாள் குடிக்காம இருந்திருக்கானா அதை பண்ணவ நீ, இப்ப நடந்ததுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அதை முதல்ல நீ உன் மனசார நம்பு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே இதையெல்லாம் கவனித்த ரேணுகா அர்ச்சனாவிற்கு ஃபோன் போட்டு இந்த மருந்த வேற யாரோ கலக்கி இருக்காங்க என்று நந்தினியும் அருணாச்சலம் ஐயாவும் பேசிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல அப்படியா அப்ப வேற யாரோ என்ற கேள்வி இருக்கா என்று சொல்லி நான் சொல்றதை அப்படியே செய் என்று சொல்லி ரேணுகாவிடம் எதையோ சொல்லுகிறார். சுந்தரவல்லிக்கு நந்தினி மேல இருக்குற கோபம் வெறியா மாறனும் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் ஏற்கனவே குடும்பத்துல இருக்குற எல்லாரும் என்ன திட்டிக்கிட்டு இருக்காங்க இதுல நீங்க குடிச்சிட்டு திருப்பி ஏதாவது ஆனா யார் சார் பதில் சொல்றது என சூர்யாவை பார்த்து நந்தினி கேள்வி கேட்கிறார். என்ன ஹாஸ்பிடல்ல சேர்த்ததுக்கு உன்ன திட்றத்துக்கும் என்ன காரணம் அப்ப நீ தான் என்னை ஏதாவது செஞ்சியா என்று கேட்கிறார்.

மறுபக்கம் அங்க சுத்தி இங்க சுத்தி அவரு பழிய தூக்கி யார் மேல போறாரு பாத்தியா என்று மாதவி கோவப்பட்டு அசோகனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 19-02-25
Moondru Mudichu Serial Today Promo Update 19-02-25