
வித்யாவிற்கு ஐடியா கொடுத்த மீனா, அருண் வீட்டிற்கு வந்த சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
வித்யாவிற்கு மீனா ஐடியா கொடுக்க அருண் வீட்டிற்கு சீதா வந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பரசு அண்ணாமலை வீட்டிற்கு மனைவியுடன் வந்து பழத்தட்டு கொடுத்து கல்யாணம் முடிந்த விஷயத்தை சொல்லுகிறார். முத்துவும் மீனாவும் இல்லனா இது நடந்திருக்காது அவங்க வயசுல சின்னவங்களா இருந்தாலும், மனசளவுல ரொம்ப பெரியவங்க என்று பெருமையாக பேசு விஜயாவும் ரோகிணியின் முகம் மாறுகிறது. உடனே விஜயா புரோக்கர் வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா என்று கிண்டல் அடிக்க ரோகினி சிரிக்கிறார்.
பரசு எங்களுக்கு எவ்வளவு சொந்தக்காரங்க இருந்தாலும் நீங்க ரொம்ப முக்கியம் குடும்பத்தோட கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்று சொல்லிவிட்டு முத்துவிடம் நீ தான் பா முன்ன இருந்து எல்லாம் பாத்துக்கணும் என்ற சொல்ல உடனே மீனா அதெல்லாம் நீங்க சொல்லனுமா டெக்கரேஷன் வேலைய நான் பாத்துக்குறேன் என்று சொல்ல உடனே முத்து டிராவல்ஸ் பிரச்சனையை நான் பாத்துக்குறேன் என் ஃப்ரெண்ட்ங்களோட கார் இருக்கு என்று சொல்லுகிறார். மேக்கப் போடவும் ஆள் இருக்கு என்று ரோகினியை சொல்ல ரோகிணியும் ஒத்துக் கொள்கிறார். பிறகு ரவி நீங்க கேட்டரிங் ஆள வச்சிட்டீங்கன்னு சொன்னாங்க அதனால உங்களுக்கு நான் ஒரு ஸ்வீட் பண்ணி கொடுக்கிறேன். அதுக்கப்புறம் வருஷத்துக்கு வைக்கிற சீவீட்டையும் பண்ணி தரேன் என்று சொல்ல விஜயா மொத்தமா எங்க குடும்பத்துல இருந்து பிரியா கல்யாணம் பண்ணி வச்சிருவீங்க போல இருக்கு என்று சொல்லுகிறார்.
பிறகு அண்ணாமலை மாப்பிள்ளை வீட்ல எப்படி இருக்காங்க என்று கேட்க எல்லாம் நல்லவங்களா இருக்காங்க அதுலயும் மாப்பிள்ளையோட மாமா ரொம்ப நல்லவரா இருக்காரு அவர் தான் எல்லாத்தையும் பேசினார் கறிக்கடை வெச்சிருக்கறத சொன்னாரு என்று சொல்ல உடனே விஜயா அப்போ ஞாயிற்றுக்கிழமை ஆனா கறி ப்ரியா வந்துரும் அப்படி தானே என்று சொல்லுகிறார். உடனே முத்து நீங்களும் அவர நல்லவர் என்று சொல்லிக்கிட்டு இருக்கீங்க ஒரு தடவை கூட பார்க்க முடியல என்று சொல்ல, அன்னைக்கு நீங்க கிளம்பன உடனே அவர் வந்திருந்தார் என்று சொன்ன இதுக்கு அப்புறம் கல்யாண வேலைகள் தான் இருக்கு இல்ல அப்போ பாத்துக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர்.
மறுபக்கம் மனோஜ் நேராக போலீஸ் ஸ்டேஷனில் வந்து என்னோட கேஸ் என்ன ஆச்சு கண்டுபிடிச்சீங்களா என்று அதிகாரமாக கேட்க அங்கிருக்கும் போலீஸ் முதல நீ யாரு உன் பேர் என்ன என்ன கேஸ் என்பதை முதலில் சொல்லு என்று கேட்கின்றனர். 30 லட்ச ரூபா ஏமாத்திட்டான்னு கம்பளைண்ட் கொடுத்தோமே என்று சொல்ல அந்த கேசா பாப்பாங்க வெயிட் பண்ணு பாத்துட்டு தான் இருக்காங்க சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவாங்க என்று சொல்ல இவ்வளவு நாள் ஆகுது நீங்க எதுவுமே சொல்லல பேசாம இவங்களோட பெரிய இடத்துல கம்ப்ளைன்ட் பண்ண சீக்கிரமா கண்டுபிடித்து தருவாங்களா என்று சொல்ல அதற்கு அந்த கான்ஸ்டபிள் நேரா பிளைட் புடிச்சு ஜனாதிபதி கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணு என்று சொல்ல என்ன கிண்டல் பண்றீங்களா என்று கேட்கிறார் கண்டுபிடித்து தந்திடுவாங்க போயா என்று சொல்லி அனுப்பி வைக்க கான்ஸ்டபிள் ஸ்டேஷனுக்கு வருகிறார் கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் வந்த பிறகு அவரிடம் என்னை அப்படி பண்ணி வச்சிருக்க என்று சொல்லி அந்த வீடியோவை காட்டுகின்றனர் அந்த நேரம் எனக்கு கொஞ்சம் அர்ஜெண்டா வேலை இருக்குது அதனாலதான் இப்படி பண்ணிட்டேன் அப்போ நிறைய பேருக்கு அந்த மாதிரி இருக்கும்போது நம்ப அதை ஒத்துக்கிறோமா என்று கேள்வி கேட்டுவிட்டு சரி விடு மூணு நாள் உனக்கு சஸ்பென்ஷன் கொடுக்க சொல்லி இருக்காங்க என சொல்ல அருண் இந்த ஒரு வாட்டி மன்னிச்சிடுங்க என்று சொல்லியும் பரவால்ல விடுயா இதுவே வீடியோ போனதுனால தான் இதுக்கு மேல இப்படி பண்ணாத என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.பிறகு வெளியில் வந்த அருன் இது என்னோட கேரியர்ல ஃபர்ஸ்ட் பிளாக் மார்க் இதை யார் பண்ணாங்கன்னு தெரியும் அவன சும்மா விடமாட்டேன் என்று சொல்லுகிறார்
மறுபக்கம் மீனாவை வித்யா சந்திக்க அவரிடம் நீங்கள் சொன்ன மாதிரி நான் போன்ல வாங்கிட்டேன் அதுல எதுவுமே இல்ல என்று சொல்ல அப்போ நல்லவரா தான் இருப்பார் நீங்க பேசி பாருங்க என்று சொல்லுகிறார் அது எப்படி உடனே பண்ண முடியும் அவங்கள பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா என்று கேட்க அதற்கு மீனா விடம் ஐடியா கேட்கிறார் அதற்கு மீனாவும் உங்களுக்கு புடிச்ச ஒரு பத்து விஷயத்தை பேப்பர்ல எழுதுங்க அவருக்கு புடிச்ச 10 விஷயத்தை பேப்பர்ல எழுதி கொடுக்க சொல்லுங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி படிச்சு தெரிஞ்சுக்கோங்க என்று மீனா சொல்லிவிட்டு சென்றுவிட, இதையெல்லாம் ரோகினி மறைந்து நின்று பார்த்துவிட்டு வித்யாவிடம் இப்பல்லாம் என்ன மீனா கிட்ட நீ ரொம்ப நெருக்கமா பழகிட்டு இருக்க உனக்கு நான் பிரண்டா இல்ல அவ பிரண்டா என்று கேட்க நீ பிரண்டு மீனா எனக்கு அட்வைசர் என்று சொல்லுகிறார். என்ன விஷயம் என்று சொல்லு என்று கேட்க அதுதான் உனக்கு அப்புறமா சொல்றேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். எனக்கு பசிக்குது நான் சாப்பிட போறேன் நீயும் வரியா என்று சொல்ல பிறகு இருவரும் சாப்பிட செல்கின்றனர்.
மறுபக்கம் சீதா அருண் வீட்டுக்கு வர அவர்கள் என்ன பேசிக் கொள்கின்றனர்? சீதா அருனிடம் என்ன கேட்கிறார்? அதற்கு அவரின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
